/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோட்டைமலையில் 'மஞ்சக்கால் பச்சைப்புறா' பண்பாட்டுச் சூழல் நடையில் கண்டுபிடிப்பு
/
கோட்டைமலையில் 'மஞ்சக்கால் பச்சைப்புறா' பண்பாட்டுச் சூழல் நடையில் கண்டுபிடிப்பு
கோட்டைமலையில் 'மஞ்சக்கால் பச்சைப்புறா' பண்பாட்டுச் சூழல் நடையில் கண்டுபிடிப்பு
கோட்டைமலையில் 'மஞ்சக்கால் பச்சைப்புறா' பண்பாட்டுச் சூழல் நடையில் கண்டுபிடிப்பு
ADDED : அக் 22, 2024 05:24 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் மேலுார் சுக்காம்பட்டி கோட்டைமலையில் பண்பாட்டு சூழல் நடைபயணம் சென்ற குழுவினரால் 'மஞ்சக்கால் பச்சைப் புறா' ஆவணப்படுத்தப்பட்டது.
இதில் தேவாங்கு, குரங்கு, உடும்பு, காட்டுப்பூனை, மரநாய், கீரி, அணில் மற்றும் ராஜாளி பருந்து, புள்ளிப்புறா, கள்ளிப்புறா, வல்லுாறு உள்ளிட்ட 50 வகை பறவைகள் ஆவணப்படுத்தப்பட்டன.
பறவையியலாளர்கள்பத்ரி நாராயணன், ஜோதிமணி, வெங்கட்ராமன் கூறுகையில், 'மஞ்சக்கால் பச்சை புறா' என்பது மகாராஷ்டிரா மாநில பறவை. அடர்ந்த காட்டுப்பகுதிகளில் அதிகம் காணப்படும். மதுரையில் முதன்முறையாக கோட்டைமலை அடிவாரத்தில் 4 புறாக்கள் தென்பட்டன' என்றனர்.
தண்ணீர் பாம்பு, சதுரங்க பாம்பு, சாரை, பச்சை ஓணான், பாறைப் பல்லி, கல்தேரைகளின் இருப்பு குறித்து காட்டுயிர் ஆய்வாளர் விஷ்வாவும், 14 வகையான வண்ணத்துபூச்சிகளை லேடிடோக் கல்லுாரி மாணவி சந்தியாவும் ஆவணப்படுத்தினர்.
பராய், கருக்குவாச்சி, வெப்பாலை, உசிலை, வாகை, குருந்தம், மயிலடி, நொச்சி, வெருவெட்டான், சிறு கிளுவை, மகிழம், பனை, சிற்றீச்சம், திருகு கள்ளி, கரும்பூலா, இம்பூரல், முதியோர் கூந்தல், சிட்டி புல், திருக்கள்ளி, சப்பாத்தி கள்ளி, கோவைக் காய், நரந்தம் புல் உள்ளிட்ட தாவரங்களை ஆய்வாளர் கார்த்திகேயன் ஆவணப்படுத்தினார்.
பறம்பு மலை பாதுகாப்பு இயக்க நிர்வாகி கர்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்தாசன் ஒருங்கிணைத்தார்.