நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் தைவான் பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் சர்வதேச கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் நிகழ்ந்த கூட்டமைப்பில் பங்கேற்றனர்.
பல்கலை ஜேம்ஸ் வியாதப்பன் தலைமை வகித்தார். இரு நாட்டிற்கும் உண்டான கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், ஒருங்கிணைந்த வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர். பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி முதல்வர் செலின் சகாயமேரி, ஆய்வுப்புலத் தலைவர் கலா பங்கேற்றனர்.

