/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வதேச கல்வி வாய்ப்பு குறித்து கலந்துரையாடல்
/
சர்வதேச கல்வி வாய்ப்பு குறித்து கலந்துரையாடல்
ADDED : அக் 12, 2025 04:35 AM
சோழவந்தான் : நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி கல்வி குழுமம், 'அமெரிக்கன் காலேஜ் டெஸ்டிங்' நிறுவனம் சார்பில் சர்வதேச கல்வி வாய்ப்புகள் குறித்த கலந்துரையாடல் நடந்தது.
ஏ.சி.டி., நிறுவனத்தின் சி. இ.ஓ.,ஷேன்கிங் தலைமை வகித்தார். ஆறு முதல் பிளஸ் 2 வரையான மாணவரை சந்தித்து ஏ.சி.டி., யின் மதிப்பீட்டு முறை, நோக்கம், கல்வி விளைவுகள், உலகளாவிய உயர் கல்வி நிறுவனங்களில் ஏ.சி.டி., மதிப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
சர்வதேச செயல்பாடுகள் இயக்குனர் பினோத் சால்கோ, மண்டல இயக்குனர் சார்ல்ஸ் சிங் கல்வித் தயாரிப்புகள், உலகளாவிய கல்வி இணைப்புகளை அறிமுகம் செய்தனர். கல்வி குழுமத் தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ், இயக்குனர் கோவிந்த், முதல்வர் ஷர்மிளா பங்கேற்றனர்.