ADDED : அக் 17, 2024 05:38 AM
அ நிறம் | அளவு
விக்கிரமங்கலம்: செல்லம்பட்டி ஒன்றியம் எரவார்பட்டி ஊராட்சி துவக்க பள்ளியில் 17 மாணவர்கள் படிக்கின்றனர், 2 ஆசிரியர்கள் உள்ளனர். சமீபத்திய மழையால் பழமையான பள்ளி வகுப்பறையின் சிமென்ட் பூச்சுக்கள் நேற்று முன்தினம் இரவு பெயர்ந்து விழுந்தன. மாணவர்கள் இல்லாத நேரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பள்ளி தற்காலிகமாக செயல்படுகிறது. வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்ட ஒன்றிய அதிகாரிகள் அதனை இடிக்க பரிந்துரைத்துள்ளனர்.
உசிலம்பட்டி எம்.எல்.ஏ., ஐயப்பன் ஆய்வு செய்து பள்ளியை சீரமைக்கவும், புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக தெரிவித்தார்.
