ADDED : மார் 01, 2026 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: தேனுாரில் குடிநீர் தொட்டி பயன்பாடற்று காட்சி பொருளாக உள்ளது. இங்கு மதுரை மெயின் ரோட்டில் குருசாமி மடம் அருகே ஊராட்சி பொதுநிதி 2014- -15ன் கீழ் ரூ.85 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. பொது சுகாதாரத்திற்கும், குடிநீர் தேவைக்கும் மக்கள் இதனை பயன்படுத்தி வந்தனர்.
சில ஆண்டுகளாக மோட்டார் பழுதால் தொட்டி செயல்படவில்லை.
இதனால் குழாய்கள் துருப்பிடித்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சுற்றிலும் செடி, கொடிகள் முளைத்து சருகுகள்நிறைந்து புதராக காணப்படுகிறது. மேலும் தொட்டி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டு விளம்பர பலகையாக மாறிவிட்டது.
ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

