சர்ச்சை பேச்சால் அதிருப்தி மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ.,
சர்ச்சை பேச்சால் அதிருப்தி மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ.,
ADDED : செப் 29, 2026 03:22 AM
வேலுார்: குழந்தைகளுக்கு நோய் தொ ற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறி, செய்தியாளர்களை வெளியேற சொன்ன த.வெ.க., - எம்.எல்.ஏ., வினோத் கண்ணன், 37, மன்னிப்பு கேட்டார்.
வேலுார் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில், கலெக்டர் லீலா அலெக்ஸ் தலைமையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்ட விழா நேற்று நடந்தது. இதில், த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் வேலுார் வினோத் கண்ணன், காட்பாடி சுதாகர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அங்கிருந்த செய்தியாளர்களை பார்த்து எம்.எல்.ஏ., வினோத் கண்ணன், ''குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, செய்தியாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியேற வேண்டும்,'' என்றார்.
அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள், விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வெளியேறினர். அதன்பின், எம்.எல்.ஏ., வினோத் கண்ணன், செய்தியாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
