/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் வீடுகளில் விண்ணப்ப வினியோகம் இன்று துவக்கம்

ADDED : ஜூலை 07, 2025 02:37 AM
மதுரை : தமிழகத்தில் ஜூலை 15 ல் உங்களுடன் ஸ்டாலின் என்ற மக்கள் குறைகளை நேரடியாக கேட்டறியும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் வீடுவீடாகச் சென்று குறை கேட்டு விண்ணப்பம் வழங்க 1002 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் 20 முகாம்கள், நகராட்சிகளில் 15, பேரூராட்சியில் 9, ஊராட்சிகளில் 76 முகாம்கள் முதற்கட்டமாக நடக்க உள்ளன. நகர்ப்புறங்களில் 13 துறைகளின் மூலம் 43 சேவைகளும், கிராமப்புறங்களில் 15 துறைகளின் மூலம் 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. முகாமில் மகளிர் உரிமைத் தொகை விண்ண்ப்பம் வழங்கப்பட உள்ளது. மனுக்களுக்கு 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்