தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி


ADDED : நவ 16, 2024 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் மாநகராட்சி நீச்சல் குளத்தில் நடந்தது. 8 பிரிவுகளில் 270 பேர் பங்கேற்றனர்.

மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டலத்தலைவர் வேல்முருகன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் புவனேஸ்வரி போட்டிகளை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு நீச்சல் சங்க தலைவர் திருமாறன் பரிசு வழங்கினார்.

5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகளில் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றவர்கள்: குயின்மீரா பள்ளி அஸ்வந்த் சாய், தருணிகா, லீ சாட்லீயர் பள்ளி ரோஷிணி, கேந்திரிய வித்யாலயா பள்ளி அகஸ்தியா, கேசவன், திரிவேணி பள்ளி பாலதீபிகா, செயின்ட் மேரீஸ் பள்ளி சோலைஅபிமன்யூ, சி.இ.ஓ.ஏ. பள்ளி ஹேமா கார்த்திகேயேன், தான்யாஸ்ரீ, சுப தக்க்ஷனா, பவதாரணி, ஆகாஷ் பாண்டியன், எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மோஷிகா, தன்ஷிகா, ஜெயின் வித்யாலயா பள்ளி அமிழ்தன், வேலம்மாள் பள்ளி முகில்குமார், ஜெ.டி.எ.எஸ். பள்ளி முகமது உமர்அப்பாஸ்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நெல்லை சங்க செயலாளர் லட்சுமணன், கவுன்சிலர் முருகன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் அமிர்தராஜ், சிவபாலன், வெங்கடேஸ்வரன், இளமுருகன், வேல்முருகன், கோபி, பாலா செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us