தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாவட்ட நீச்சல் போட்டி

மாவட்ட நீச்சல் போட்டி

மாவட்ட நீச்சல் போட்டி


UPDATED : அக் 29, 2026 11:36 PM

ADDED : அக் 29, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 11:36 PM ADDED : அக் 29, 2026 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் சார்பில் மாவட்ட நீச்சல் போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது.

சங்கத் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாநில தலைவர் திருமாறன், செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.

ஆடவர் 200 மீட்டர் ஐ.எம்.பிரிவு போட்டி முடிவுகள் :

குரூப் 1 பிரிவில் ஹேமகார்த்திகேயன் முதலிடம், ஜெயின் வித்யாலயா சாத்விக் இரண்டாமிடம் பெற்றனர். குரூப் 2 பிரிவில் ஹரிஹரன் முதலிடம், அரவிந்த பிரசாத் இரண்டாமிடம் பெற்றனர். குரூப் 3 ல் கேந்திரிய வித்யாலயா (கே.வி.,) தியானேஷ் முதலிடம், திரிவேணி பள்ளி சஞ்சீவன் இரண்டாமிடம், ஜெயின் வித்யாலயா ஷான் மாதுரன் மூன்றாமிடம் பெற்றனர். குரூப் 4ல் கே.வி. பள்ளி கேசவன் முதலிடம், மகாத்மா பள்ளி மிதுல் கவின் இரண்டாமிடம், விகாசா பள்ளி தஸ்வன் மூன்றாமிடம் பெற்றனர்.

குரூப் 5 க்கான 100 மீட்டர் ஐ.எம். பிரிவில் ஆகாஷ் பாண்டியன் முதலிடம், சைதன்யா டெக்னோ பள்ளி அக்ஷன் இரண்டாமிடம், ரோஹித் மூன்றாமிடம் பெற்றனார். குரூப் 6 பிரிவில் மதர் ஜஸ்டா பள்ளி சாய் கிருத்திகன் முதலிடம், பஸ்கோஸ் பள்ளி ஜஸ்வந்த்குமார் இரண்டாமிடம், சைதன்யா பள்ளி தேவதர்ஷன் மூன்றாமிடம் பெற்றனர்.

குரூப் 1 க்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் கவின் முதலிடம், ஜெயின் பள்ளி சாத்விக் இரண்டாமிடம் பெற்றனர். 100மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் கவின் முதலிடம், ஜெயின் பள்ளி சாத்விக் இரண்டாமிடம் பெற்றனர். 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஹேமகார்த்திகேயன் முதலிடம், ஜெயின் பள்ளி சர்வேஷ் இரண்டாமிடம் பெற்றனர். ப்ரீஸ்டைல் பிரிவில் ஹேமகார்த்திகேயன் முதலிடம், சர்வேஷ் இரண்டாமிடம்,

குரூப் 2க்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹரன் முதலிடம், வேலம்மாள் வித்யாலயா சிவபாலன் இரண்டாமிடம், சத்திரப்பட்டி அரசுப்பள்ளி மலையாளம் மூன்றாமிடம் பெற்றனர். 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் செயின்ட் மேரி பள்ளி சோலை ஆதி முதலிடம், கே.வி. பள்ளி ஜஸ்வந்தன் இரண்டாமிடம், சத்திரப்பட்டி அரசுப்பள்ளி அடைக்கலபாண்டி மூன்றாமிடம் பெற்றனர். பட்டர்பிளை பிரிவில் அரவிந்த பிரசாத் முதலிடம், அடைக்கலபாண்டி இரண்டாமிடம், ஜெயசூர்யா மூன்றாமிடம் பெற்றனர். ப்ரீஸ்டைல் போட்டியில் ஹரிஹரன் முதலிடம், ஸ்ரீஹரன் இரண்டாமிடம், வேலம்மாள் வித்யாலயா சிவபாலன் மூன்றாமிடம் பெற்றனர்.

குரூப் 3 க்கான 100 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் சஞ்சீவன் முதலிடம், தியானேஷ் இரண்டாமிடம், ஷான் மாதுரன் மூன்றாமிடம் பெற்றனர். குரூப் 4 பிரிவில் கேசவன் முதலிடம், மிதுல் கவின் இரண்டாமிடம், தஸ்வின் மூன்றாமிடம் பெற்றனர்.

ஓப்பன் குரூப் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வேலம்மாள் பொறியியல் கல்லுாரி பிரஷித் சரவணன் முதலிடம், ஜெயநிதில் இரண்டாமிடம், லேடிடோக் கல்லுாரி சபானா சேகர் முதலிடம், 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் பிரசீத் சரவணன் முதலிடம், சபானா இரண்டாமிடம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us