தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாவட்ட வாலிபால் போட்டி

மாவட்ட வாலிபால் போட்டி

மாவட்ட வாலிபால் போட்டி


ADDED : நவ 07, 2025 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் அழகர்கோவில் ஏ.எம்.எஸ். பள்ளியில் நடந்தன. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஆடவர் பிரிவு 14 வயது ஆடவர் பிரிவு போட்டியில் சாப்டூர் அரசுப் பள்ளி முதலிடம், செயின்ட் மைக்கேல் பள்ளி 2ம் இடம், பாலமேடு அரசுப்பள்ளி 3ம் இடம், திருவாதவூர் லட்சுமி பள்ளி 4ம் இடம் பெற்றன.

17 வயது பிரிவில் சேதுபதி பள்ளி முதலிடம், சி.இ.ஓ.ஏ., பள்ளி 2ம் இடம், வெள்ளையம்பட்டி அரசுப் பள்ளி 3ம் இடம், கல்யாணி பள்ளி 4ம் இடம் பெற்றன.

19 வயது பிரிவில் எம்.சத்திரப்பட்டி அரசுப் பள்ளி முதலிடம், பாலமேடு பத்திரகாளியம்மன் பள்ளி 2ம் இடம், வி.எச்.என்., பள்ளி 3ம் இடம், லார்டு வெங்கடேஸ்வரா பள்ளி 4ம் இடம் பெற்றன.

மகளிர் பிரிவு 14 வயது மகளிர் பிரிவு போட்டியில் அழகர்கோவில் ஏ.எம்.எஸ். பள்ளி முதலிடம், எஸ்.புளியங்குளம் அரசுப் பள்ளி 2ம் இடம், செயின்ட் ஜோசப் பள்ளி 3ம் இடம், அத்திப்பட்டி ஆர்.எம்.பி.எஸ். பள்ளி 4ம் இடம் பெற்றன.

17 வயது பிரிவில் ஏ.எம்.எஸ். பள்ளி முதலிடம், செயின்ட் ஜோசப் பள்ளி 2ம் இடம், எஸ்.புளியங்குளம் அரசுப் பள்ளி 3ம் இடம், நிர்மலா பள்ளி 4ம் இடம் பெற்றன.

19 வயது பிரிவில் நிர்மலா பள்ளி முதலிடம், செயின்ட் ஜோசப் பள்ளி 2ம் இடம், ஏ.எம்.எஸ். பள்ளி 3ம் இடம், கேப்ரன் ஹால் பள்ளி 4ம் இடம் பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us