/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவிகளுக்கான மாவட்ட வாலிபால் போட்டிகள்
/
மாணவிகளுக்கான மாவட்ட வாலிபால் போட்டிகள்
ADDED : ஜன 02, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் ரோட்டரி கிளப் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளி 19 வயதுக்குட்பட்டோர் மாணவிகளுக்கான மாவட்ட வாலிபால் போட்டி நடந்தது.
லீக் முறையில் நடந்த இப்போட்டிகளில் 8 பள்ளி அணியினர் பங்கேற்றனர்.
இறுதிப்போட்டியில் அழகர்கோவில் சுந்தரராஜா பள்ளி 'பி' அணி 25--15, 25--16 என்ற நேர் செட்டுகளில் 'ஏ' அணியை வென்று சாம்பியன் ஆனது.
3ம் இடம் ஓ.சி.பி.எம். பள்ளி, மேலுார் தெற்கு தெரு பள்ளி 4ம் இடம் பெற்றன.
பரிசளிப்பு விழாவில் கிளப் தலைவர் முத்து வேலாயுதம், மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த பாண்டி பரிசு வழங்கினர்.

