sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கழிவுநீர் வடிகால் பாலத்தில் பள்ளம்

/

 கழிவுநீர் வடிகால் பாலத்தில் பள்ளம்

 கழிவுநீர் வடிகால் பாலத்தில் பள்ளம்

 கழிவுநீர் வடிகால் பாலத்தில் பள்ளம்


ADDED : ஜன 05, 2026 05:46 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: திருப்பரங்குன்றம் ஒன்றியம் துவரிமான் மேல தெருவில் கழிவுநீர் வடிகால் பாலத்தில் கான்கிரீட் தளம் உடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.

இப்பகுதிக்கு நடுத்தெரு, நான்கு வழிச்சாலை, துவரிமான் கண்மாய் கரை ரோடுபகுதி, மேல தெரு குடியிருப்பு வாசிகள் அதிகம் வந்து செல்கின்றனர். ஓராண்டுக்கு முன் மேலத்தெரு பகுதியில் சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது.

இத்தெரு நுழைவு பகுதியில் கடக்கும் கழிவுநீர் வடிகால் மீது கான்கிரீட் பாலம் அமைத்தனர்.

தரமற்ற பணி, கனரக வாகனங்கள் சென்று வந்த காரணத்தால் 3 மாதங்களுக்கு முன் கான்கிரீட் ஸ்லாப் உடைந்து பள்ளம் உருவானது. ஊராட்சி நிர்வாகம் சரிசெய்யாததால் பள்ளம் விரிவடைந்தது. தற்போது இவ்வழியாக டூவீலர் மட்டுமே செல்ல முடியும். கான்கிரீட் கம்பிகள் 3 அடிக்கு மேல்நோக்கி நிற்கின்றன. பூச்சுகள் உடைந்துள்ளன.

பொதுமக்கள் இவ் வழியாக சென்று வர சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும், சைக்கிள் ஓட்டி விளையாடும் சிறுவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஒன்றிய நிர்வாகம் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us