ADDED : ஆக 20, 2026 06:32 PM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் முருகன், தீனன், யோகராஜ், அழகர்சாமி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மரியசெல்வம் உள்ளிட்டோர், தேர்தல் வாக்குறுதிப்படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பாதிப்பினைக் களைந்திடும் வகையில் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.
