ADDED : அக் 01, 2026 02:11 AM

அ நிறம் | அளவு
எழுமலை: எழுமலை செயல் அலுவலர் ஜெயமுருகன் கூறியதாவது: எழுமலை பேரூராட்சியின் அக்.1 முதல் வீடுகளில் சேரும்குப்பையை 4 ஆக தரம் பிரித்து வழங்கவேண்டும்.
மட்கும் தன்மையுள்ள சமைத்த, சமைக்காத உணவு போன்ற மட்கும் தன்மையுள்ள குப்பையை ஈரக்கழிவு குப்பையாகவும், காகிதங்கள், பிளாஸ்டிக், உலோகங்கள் துணிகள் என மறு சுழற்சி செய்யக்கூடியவற்றை உலர் கழிவுகளாகவும், மருத்துவக்கழிவுகளை சுகாதாரக் கழிவுகளாகவும், பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்கள், சி.எப்.எல்., பல்புகள், காலாவதியான மருந்துகள், மின்னணு கழிவுகளை சிறப்பு கவனிப்புக் கழிவுகளாக தரம்பிரித்து வழங்க வேண்டும் என்றார்.
