நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடை வழங்கும் விழா நடந்தது.
கிளைத் தலைவர்கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில மூத்த துணைத் தலைவர் அமுதன், மாவட்ட தலைவர் ரங்கராஜன் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் தீபாவளி புத்தாடை வழங்கப்பட்டது.
கிளையின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் கல்யாணி, பத்மா, மகளிர் அணி செயலாளர் ராஜம்மீனாட்சி, செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, உமா, இணைச் செயலாளர்கள் மீனாட்சிசுந்தரம், முன்னாள் தலைவர் ராமநாதன் பங்கேற்றனர்.