/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க.,-அ.தி.மு.க., காண்பது பகல் கனவு வேலுார் இப்ராஹிம் கூறுகிறார்
/
தி.மு.க.,-அ.தி.மு.க., காண்பது பகல் கனவு வேலுார் இப்ராஹிம் கூறுகிறார்
தி.மு.க.,-அ.தி.மு.க., காண்பது பகல் கனவு வேலுார் இப்ராஹிம் கூறுகிறார்
தி.மு.க.,-அ.தி.மு.க., காண்பது பகல் கனவு வேலுார் இப்ராஹிம் கூறுகிறார்
ADDED : ஜன 29, 2024 05:59 AM
மதுரை: 'முஸ்லிம், கிறிஸ்தவர்களிடம் பா.ஜ.,வைக் காட்டி பயமுறுத்தி ஓட்டுக்களை அள்ள நினைக்கும் தி.மு.க., அ.தி.மு.க.,வின் எண்ணம் பகல்கனவாக மாறும்' என பா.ஜ.,சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் பிரதமரின் மன்கி பாத் ஒளிபரப்பு, லோக்சபா தேர்தலுக்காக சுவரில் தாமரை சின்னத்தை வரையும் நிகழ்ச்சி போன்றவற்றில் வேலுார் இப்ராஹிம் பங்கேற்றார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை பா.ஜ., ஏற்படுத்தி வருகிறது. முஸ்லிம், கிறிஸ்தவ ஓட்டு வங்கியை குறிவைத்து அரசியல் செய்யும் தி.மு.க., அ.தி.மு.க., கட்சியினர், வழக்கம்போல பா.ஜ.,வைக் காட்டி பயமுறுத்தி ஓட்டுக்களை அள்ளிவிடலாம் என நினைப்பது பகல் கனவாக மாறும்.
ராமர்கோயில் திறப்பு நாளில், கடந்த கால கசப்புகளை மறந்து அனைவரும் அகல்விளக்கேற்றுங்கள் என பிரதமர் விடுத்த அழைப்புக்கு 140 கோடி மக்களும் செவிசாய்த்துள்ளது, மதநல்லிணக்கத்திற்கான முன்னுதாரணம் இங்கு முஸ்லிம்களை, ஹிந்துக்களுக்கு எதிராக ஊக்குவிக்கும் சில கட்சிகளோடு ஓட்டுக்காக அ.தி.மு.க., இணைவது தமிழகத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதாக அமையும். தேசிய வழியில் நிற்போம் என்று கூறிய அ.தி.மு.க., இன்று மத, சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்போருடன் தேர்தலை சந்திப்பதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
தி.மு.க.,வின் ஊழல் ஆட்சியை எதிர்க்க பிரதமரின் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து பா.ஜ., இத்தேர்தலை சந்திக்கும். தமிழக மக்கள் நிச்சயம் பிரதமர் மோடி 3வது முறை பிரதமராக தங்கள் பங்களிப்பைச் செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.