தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க.,

 தி.மு.க.,

 தி.மு.க.,


ADDED : மார் 29, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 05:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை கிழக்கு

பெ.மூர்த்தி

வயது : 67

படிப்பு : பி.ஏ.,

தொழில் : விவசாயம்

குடும்பம் : ↓மனைவி, இரு மகன்கள்

அரசியல் அனுபவம் : கல்லுாரிக் காலம் முதலே தி.மு.க., உறுப்பினர். வெளிச்சநத்தம் கிளை செயலாளர், மதுரை மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர், 5 ஆண்டுகள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 2006 - 11 வரை சோழவந்தான் எம்.எல்.ஏ.,. 2011ல் மதுரை கிழக்குத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தவர், 2016 முதல் அத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேல் மாவட்ட செயலாளர். 2021 முதல் அமைச்சர்.

கிடைத்தது எப்படி

கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு திறம்பட பணிகளை செய்து முடிப்பவர். கட்சி மாநாடு, பொதுக்கூட்டங்களை பிரம்மாண்டமாக நடத்தி தலைமையிடம் நெருக்கம் பெற்றவர். தொகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவர். அமைச்சர் என்ற முறையில் தனது துறையான பத்திரப்பதிவு, வணிகத்துறையில் இருந்து அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி தந்துள்ளார்.

மதுரை மத்தி

ப.தியாகராஜன்

வயது : 60

படிப்பு : ↓பி.டெக்., எம்.எஸ்., எம்.பி.ஏ., பி.எச்டி.,

தொழில் : விவசாயம்

குடும்பம் : ↓மனைவி, இரு மகன்கள்

அரசியல் அனுபவம்: சபாநாயகராக, அமைச்சராக இருந்த தந்தை பழனிவேல்ராஜன் மறைவிற்கு பின், 2016ல் மதுரை மத்தி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். 2021ல் மீண்டும் இதே தொகுதியில் வென்று அமைச்சராக உள்ளார்.

கிடைத்தது எப்படி

பாரம்பரியமிக்க அரசியல் குடும்பம். முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு நெருங்கிய நண்பர். தொகுதி வளர்ச்சிக்கு உதவியது, மக்களிடம் அதிருப்தி இல்லாததால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை வடக்கு

கோ.தளபதி

வயது : 70

படிப்பு : பிளஸ் 2

தொழில் : ↓விவசாயம், ஒப்பந்த பணி

குடும்பம் : ↓மனைவி, மகன், இரு மகள்கள்

அரசியல் அனுபவம் : 45 ஆண்டுகளுக்கு மேல் கட்சிப்பணி. 1996 சேடப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். 2021 முதல் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., நகர் மாவட்ட செயலாளர்.

கிடைத்தது எப்படி

நீண்ட கால அரசியல். முதல்வர் ஸ்டாலினுடன் இணக்கமாக செயல்படுபவர்.

மதுரை மேற்கு

ஆர்.பாலாஜி

வயது : 42

படிப்பு : பி.ஏ., பி.எல்.,

தொழில் : வழக்கறிஞர்

குடும்பம் : ↓ மனைவி, இரு மகள்கள்

அரசியல் அனுபவம் : 2014 - 19 வரை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். 2019 முதல் துணைச் செயலாளராக பதவி வகித்தார். தற்போது வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

கிடைத்தது எப்படி

அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர். இவரது மனைவி சத்யப்ரியா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர்.

திருப்பரங்குன்றம்

எஸ்.கிருத்திகா

வயது : 35

படிப்பு : பி.இ.,

தொழில் : ↓ ஓசிஸ் டெக்னாலஜிஸ் மென்பொருள் நிறுவன தலைவர்

குடும்பம் : கணவர், மகன்

அரசியல் அனுபவம் : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு திருமங்கலம் 22வது வார்டு கவுன்சிலர். பெண்கள் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் நம்பிக்கை, நன்மதிப்பு பெற்றவர். மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார்.

கிடைத்தது எப்படி

கணவர் தங்கபாண்டி 2021 முதல் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இதன் மூலம் கட்சியில் ஈடுபாடு ஏற்பட்டு போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்றார். மாவட்ட செயலாளர் மணிமாறனின் ஆதரவு உண்டு.

திருமங்கலம்

மு.மணிமாறன்

வயது : 51

படிப்பு : பத்தாம் வகுப்பு

தொழில் : விவசாயம்

குடும்பம் : மனைவி, மகன்

அரசியல் அனுபவம் : தந்தை சேடப்பட்டி முத்தையாவுடன் இளம் வயதிலேயே அரசியல் பயணம். 2006 முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர். 2009 - 14 வரை டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர். 2014 முதல் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர். 2011ல் திருமங்கலம், 2016ல் திருப்பரங்குன்றம், 2021ல் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டவர்.

கிடைத்தது எப்படி

தொய்வின்றி கட்சிப்பணி. தொண்டர்கள், நிர்வாகிகளுடன் நெருக்கமாக இருப்பவர். சமீபத்தில் திருமங்கலத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற பன்னீர்செல்வம் இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தியவர். இம்முறை இவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆர்வமாக உள்ளார்.

சோழவந்தான் தொகுதி (தனி)

பெயர் : ஆ.வெங்கடேசன்

வயது : 51

படிப்பு : பி.ஏ.,

தொழில் : விவசாயம், அரசியல்வாதி

குடும்பம் : மனைவி, இரு மகன்கள்

அரசியல் அனுபவம் : 1995 முதல் கட்சி உறுப்பினர். கிளை பிரதிநிதி, செயலாளர், ஊராட்சி செயலாளர், மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பிரிவு அமைப்பாளர், 2014 முதல் மதுரை வடக்கு மாவட்ட துணை செயலாளர். 2021ல் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ.,

கிடைத்தது எப்படி

கட்சிப் பணி. அமைச்சர் மூர்த்தியின் நம்பிக்கைக்குரியவர். தொகுதி மக்கள் ஆதரவு உள்ளதால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us