/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எஸ்.ஐ.ஆரை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
/
எஸ்.ஐ.ஆரை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
எஸ்.ஐ.ஆரை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
எஸ்.ஐ.ஆரை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 12:54 AM

மதுரை: மதுரை நகர் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.,) கண்டித்து புதுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் செயலாளர் தளபதி தலைமை வகித்தார். பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார். தி.மு.க., நிர்வாகிகள் பொன்முத்துராமலிங்கம், வேலுசாமி, குழந்தைவேலு, வைகை பரமன், மாணவரணி அமைப்பாளர் துரை கோபால்சாமி, பகுதி செயலாளர்கள் சரணவன், முகேஷ் சர்மா, ஜீவன்ரமேஷ், வட்ட செயலாளர்கள் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்., நகர் தலைவர் கார்த்திகேயன், ம.தி.மு.க., மார்க். கம்யூ., ம.நீ.ம., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
தளபதி, பொன்முத்து ராமலிங்கம் உள்ளிட்டோர் பேசுகையில், ஓட்டுத் திருத்தம் என்ற பெயரில் பா.ஜ., அரசியல் செய்கிறது. இப்பணியை தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின் தேர்தல் கமிஷன் மேற்கொள்ள வேண்டும் என்றனர். காலை 10:20 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டம் 10:40க்கு முடிந்தது.
திருமங்கலம் மதுரை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர் பேசுகையில், 'தேர்தல் ஆணையம் பா.ஜ.,வின் ஊதுகுழலாக செயல்படுகிறது' என்றார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., லதா, தொகுதி பார்வையாளர் அலாவுதீன், நகர் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன், ஒன்றிய செயலாளர்கள் மதன், தங்கபாண்டியன், சண்முகம், காங்., தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

