திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி பிரசாரம்
திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி பிரசாரம்
ADDED : ஏப் 13, 2026 02:52 AM

திருப்பரங்குன்றம்: : திருப்பரங்குன்றம் தி.மு.க., வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி நேற்று பசுமலை, திருநகர், சுந்தர் நகர், தோப்பூர் மந்தை, மூணாண்டிபட்டி, தனக்கன்குளம், வேடர் புளியங்குளம் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
தி.மு.க., கவுன்சிலர்கள் சுவிதா, ரவிச்சந்திரன், இந்திராகாந்தி, சிவா, காங்., கவுன்சிலர் சுவேதா, தி.மு.க., பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி, வட்டச் செயலாளர்கள் ஆறுமுகம், ஜெயராமன், சுந்தர்ராஜன் கலந்து கொண்டனர். கிருத்திகா தங்கபாண்டி பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ள மகளிருக்கான திட்டங்களால் மீண்டும் தி.மு.க., ஆட்சி வரவேண்டும் என பெண்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முதல்வர் ஸ்டாலின் ரூ. 8 ஆயிரத்திற்கான கூப்பன் வழங்க உள்ளார்.
இதன் மூலம் இல்லத்தரசிகள் டிவி, மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் என விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். திருப்பரங்குன்றம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ, ராஜன் செல்லப்பா பெரிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரவில்லை.
மக்களின் குறைகளை கேட்க தொகுதி பக்கம் வரவே இல்லை. அடிப்படை வசதிகளைக்கூட நிறைவேற்ற முயற்சிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு மேலாக பின் தங்கி உள்ளது. இந்த தேர்தலில் என்னை தேர்வு செய்யுங்கள். திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என்றார்.
