ADDED : ஜூன் 22, 2025 03:11 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி:அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதுாறாக சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக தி.மு.க., அமைச்சர் ராஜா குறித்து சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் மதுரை எஸ்.பி., அரவிந்திடம் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசியவர், 'அமைச்சர் ராஜா வெளியில் நடமாட முடியாது' என மிரட்டல் விடுத்ததாக தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அலெக்ஸ்பாண்டி, வக்கீல் அணி விக்னேஷ் தலைமையிலான நிர்வாகிகள் உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகரனிடம் புகார் அளித்தனர்.
