/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெள்ளைக்காளி கொலை முயற்சி வழக்கில் தி.மு.க., 'மாஜி' கைது
/
வெள்ளைக்காளி கொலை முயற்சி வழக்கில் தி.மு.க., 'மாஜி' கைது
வெள்ளைக்காளி கொலை முயற்சி வழக்கில் தி.மு.க., 'மாஜி' கைது
வெள்ளைக்காளி கொலை முயற்சி வழக்கில் தி.மு.க., 'மாஜி' கைது
ADDED : பிப் 19, 2026 04:42 AM

மதுரை: பெரம்பலுார் மாவட்டத்தில், ரவுடி வெள்ளைக்காளியை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சித்த வழக்கில், 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மதுரை மாநகராட்சி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி கைது செய்யப்பட்டார்.
மதுரையில், அரசியல் போஸ்டர் ஒட்டியதில், 23 ஆண்டுகளாக, பழிக்கு பழியாக இதுவரை, 21 கொலைகள் நடந்துள்ளன. குருசாமி என்பவருக்கும், அ.தி.மு.க., மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் அரசியல் பகை உள்ளது.
கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன் ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த முனுசு என்பவர் கொலை செய்யப்பட, அன்று முதல் இன்று வரை பழிக்கு பழியாக இருதரப்பிலும் பல கொலைகள் நடந்து வருகின்றன.
ராஜபாண்டி உடல்நலக் குறைவால் இறந்ததை தொடர்ந்து, அவரது சகோதரி மகனான பிரபல ரவுடி வெள்ளைக்காளி, சிறையில் இருக்கிறார். எனினும், பழிக்கு பழி வாங்க காத்து கொண்டிருக்கிறார் என கூறப்படுகிறது.
கடந்த மாதம், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி விட்டு, புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றபோது, பெரம்பலுாரில் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது.
இதில், குருசாமியின் சகோதரி மகன் கொட்டு ராஜா என்பவர் மீது போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி, சுட்டு கொன்றனர். இந்த வழக்கில், குருசாமியின் மகன் மணி உட்பட, 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து, மதுரையில் நிருபர்களை சந்தித்த குருசாமி, 'எங்கு என்ன நடந்தாலும் என் பெயரை சேர்த்து பொய் வழக்கு பதிவு செய்கின்றனர்' என புலம்பினார்.
இந்நிலையில், பெரம்பலுார் மங்களமேடு போலீசார், வெள்ளைக்காளியை கொல்ல முயற்சித்த வழக்கில், நேற்று முன்தினம் குருசாமியை மதுரையில் கைது செய்து, நெல்லை சிறையில் அடைத்தனர்.

