sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தி.மு.க., நிர்வாகி கைது

/

 பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தி.மு.க., நிர்வாகி கைது

 பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தி.மு.க., நிர்வாகி கைது

 பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தி.மு.க., நிர்வாகி கைது


ADDED : டிச 19, 2025 04:50 AM

Google News

ADDED : டிச 19, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தி.மு.க., இளைஞரணி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், துவரிமானை சேர்ந்த தி.மு.க., ஒன்றிய அவைத்தலைவர் நாகமலையின் மகன் கருணாகரன். இவர், தி.மு.க., இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். மனைவி மகள், மகன் உள்ளனர். கிராவல் மண் லாரிகள் வைத்துள்ளார்.

இவரது வீட்டில் திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த, 34 வயது பெண்ணும் அவரது கணவரும் வாடகைக்கு வசித்தனர்.

கணவர் பானி பூரி கடைக்கு சென்ற பின் தனியாக இருக்கும் பெண்ணிடம் கருணாகரன் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய துவங்கியுள்ளார். இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பக்கத்து தெருவுக்கு இடம் மாறி சென்று விட்டனர். டிச., 11 மாலை வீட்டின் மாடியில் துணி காயப்போட்டு கொண்டிருந்த அந்த பெண்ணை, கருணாகரன் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே, தப்பிய கருணாகரன், 'உன்னையும், உன் கணவனையும் லாரி ஏற்றி கொல்வேன்' என மிரட்டி சென்றார்.

சமயநல்லுார் போலீசார், பலாத்கார முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளில் கருணாகரனை கைது செய்தனர். இவர்மீது குற்ற வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us