ADDED : ஜன 26, 2026 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: சேடபட்டி ராமசாமி 48. இவர் தி.மு.க ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளராக இருந்தார். நேற்று அத்திப்பட்டியில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு டூவீலரில் சேடப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
பேரையூர்- - உசிலம்பட்டி சாலையில் சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

