தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

 தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

 தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்


ADDED : ஜன 13, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் மேலக்கோட்டையில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ''ஜல்லிக்கட்டு போட்டிகளை துவக்க வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தில் இருந்து தெற்கு மாவட்ட எல்லை வரை தொண்டர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் பின்பு வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர் வரவேற்க வேண்டும். மதுரை மாவட்ட அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றிக்கு பணியாற்ற வேண்டும்'' என்றார்.

மணிமாறன் பேசுகையில், ''கருத்துக் கணிப்புகளும் மக்களின் ஆதரவும் தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது. அதனை செயல்படுத்தி முழுமையான வெற்றியைப் பெற்று முதல்வர், துணை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., லதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியன், இளமகிழன், ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார், தனபாண்டியன், சண்முகம், நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா, துணை தலைவர் ஆதவன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் விமல் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us