தீப பிரச்னையை தி.மு.க., தான் பெரிதாக்கியது: நிர்மல் குமார்
தீப பிரச்னையை தி.மு.க., தான் பெரிதாக்கியது: நிர்மல் குமார்
ADDED : ஏப் 03, 2026 06:42 AM
திருப்பரங்குன்றம்:''சிறுபான்மை ஓட்டுக்களை பெற தீப பிரச்னையை பெரிதாக்கியது தி.மு.க., தான் '' என திருப்பரங்குன்றம் த.வெ.க., வேட்பாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது:
திருச்சியில் நடந்த விஜய் மக்கள் சந்திப்பில் போலீசார் நடுநிலையுடன் நடந்து கொண்டனர். இதே போன்று விஜய் பங்கேற்கும் அனைத்து கூட்டங்களிலும் நடந்து கொள்ள வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகள் த.வெ.க., ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள். அ.தி.மு.க., -- பா.ஜ., பிரசாரங்களுக்கு போலீசார் அனுமதி கொடுக்கின்றனர். எங்களுக்கு மட்டும் தான் கட்டுப்பாடு விதிக்கின்றனர். இடையூறு ஏற்படுத்தவே தி.மு.க., அரசு பிரசார கூட்டங்களில் ஆம்புலன்ஸ்களை அனுப்புகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்பாக திருப்பரங்குன்றம் எப்படி இருந்ததோ அப்படித்தான் தற்போதும் உள்ளது. திருப்பரங்குன்றம் முன்னேற அரசு எந்த பணியும் செய்யவில்லை.
இத்தொகுதியில் உள்ள அப்பளம் தொழிலை முன்னேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
சிறுபான்மை மக்கள் ஓட்டுக்களை பெறுவதற்காக திருப்பரங்குன்றம் தீப பிரச்னையை பெரிதாக்கியது தி.மு.க., தான். இங்கு அமைதியை சீர்குலைத்தது தி.மு.க., அரசு தான் என்றார்.
