ADDED : பிப் 11, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.
வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், தன்ராஜ், நகர் செயலாளர்கள் சத்தியபிரகாஷ், ரகுபதி முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி துணைச் செயலாளர் செந்தில் வரவேற்றார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்தது குறித்து அமைச்சர் மூர்த்தி பேசினார். பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், ரேணுகா ஈஸ்வரி, ஜெயராமன், துணை செயலாளர் ஸ்டாலின், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துப்பாண்டி, தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.