ADDED : பிப் 14, 2026 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமை தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் 3 மாத முன்தொகையாக ரூ. 3ஆயிரம், கோடை சிறப்பு தொகுப்பு தொகையாக ரூ 2 ஆயிரம் என ரூ. 5 ஆயிரம் வழங்கியுள்ளது.
மேலும் மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ. 2 ஆயிரமாக வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனை வரவேற்று உசிலம்பட்டியில் தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அஜித்பாண்டி, முருகன், பழனி பங்கேற்றனர்.
திருமங்கலம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள், பயணிகளுக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் இனிப்பு வழங்கி தி.மு.க.,வினர் கொண்டாடினர்.

