தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தி.மு.க.,வின் மரக்கன்று ஊழல் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தகவல்

 தி.மு.க.,வின் மரக்கன்று ஊழல் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தகவல்

 தி.மு.க.,வின் மரக்கன்று ஊழல் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தகவல்


ADDED : நவ 29, 2025 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் திண்ணை பிரசாரத்தை சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது: சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க., ஆட்சியில் தன்னிறைவு பெற்று இருந்தது. அப்போது கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க., கொண்டு வந்ததாக கூறிவரும் எம்.எல்.ஏ., வெங்கடேசன் பொய் பேசுவதில் கின்னஸ் சாதனை படைக்கிறார்.

அ.தி.மு.க.,வால் அடையாளம், முகவரி பெற்றவர்கள், அ.தி.மு.க.,வை கைவிட்டால் அந்த பாவம் சும்மா விடாது. அ.தி.மு.க.,வுக்கு எதிர்காலம் இல்லை என்று சொல்வோருக் கு அரசியல் வரலாறு தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.

மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊராட்சிகளில் மரக்கன்று நடுவதிலும் தி.மு.க.,வினர் ஊழல் செய்து வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் எனக்கூறி, மக்களை ஏமாற்றி பூஜியத்தை இளைஞர்களுக்கு கொடுத்து, அதில் ராஜ்ஜியத்தை உதயநிதி பெற்றுவிட்டார்.

ஒரு ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு ஸ்டாலின் அரசே சாட்சி.

பீஹார் தேர்தலில் மக்களாட்சி வென்றது போல் தமிழகத்திலும் மன்னராட்சி தோற்கடிக்கப்படும் என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், மாநில நிர்வாகி வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், ராதாகிருஷ்ணன், நகர் செயலாளர் அசோக்குமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us