/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அடுத்த தலைமையை காட்டுவதற்கு தி.மு.க.,வின் இளைஞரணி மாநாடு முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்

ADDED : ஜன 15, 2024 04:12 AM
வாடிப்பட்டி, : தி.மு.க.,வின் அடுத்த தலைவரை அடையாளப்படுத்துவதற்கு சேலத்தில் தி.மு.க., இளைஞர் மாநாடு நடக்க உள்ளதாக'' முன்னாள் அமைச்சர் உதயகுமார் வாடிப்பட்டியில் தெரிவித்தார்.
வாடிப்பட்டி அருகே நகரியில் அ.தி.மு.க.,மேற்கு மாவட்டம் சார்பில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கும் நிகழ்வை முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.
அவர் கூறியதாவது: தி.மு.க., அரசின் நிர்வாக திறமையின்மையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.
உலக முதலீட்டாளர் மாநாடு பிரமிக்க வைக்கும், ஆனால் அதன்பலன் பூஜ்ஜியம்தான்.
தி.மு.க.,வின் இளைஞரணி மாநாடு அதன் அடுத்த தலைவரை அடையாளப்படுத்தும் மாநாடாக நடைபெற உள்ளது.
மன்னர் ஆட்சியை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மக்கள் ஜனநாயகத்தை மலர செய்ய தயாராகிவிட்டனர். தி.மு.க., மக்களை திசை திருப்ப நாடகமாடி வருகிறது, என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம்,சரவணன், மகேந்திரன்,தமிழரசன், ஜெ., பேரவை நிர்வாகி வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கணேசன், ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி, நெல்லை பாலு பங்கேற்தனர்.