ADDED : ஜூலை 11, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் 8 பேர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தனர். அப்போது குடும்பத்தகராறில் ஆசிட் குடித்த பெண்ணை உறவினர்கள் அழைத்து வந்தனர்.
தொண்டை குழியில் பாதிப்பு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். வலையங்குளம் பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வருவதாக தெரிவித்தனர்.
அதேசமயம் மருத்துவமனை வளாகத்தில் இருந்த 108 ஆம்புலன்சில் (குழந்தைகளுக்கானது) அனுப்புமாறு நோயாளியின் குடும்பத்தினர் கேட்க, பணியாளர்கள் மறுக்க வாக்குவாதம் ஏற்பட்டது. பணி பாதுகாப்பு இல்லை எனக்கூறி மருத்துவமனை வளாகத்தில் டாக்டர் கார்த்திக், செவிலியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர்.