/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கான இடத்தை முடிவு பண்ணுங்க மதுரையில் டாக்டர்கள், நோயாளிகள் அலைக்கழிப்பு
/
ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கான இடத்தை முடிவு பண்ணுங்க மதுரையில் டாக்டர்கள், நோயாளிகள் அலைக்கழிப்பு
ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கான இடத்தை முடிவு பண்ணுங்க மதுரையில் டாக்டர்கள், நோயாளிகள் அலைக்கழிப்பு
ஒருங்கிணைந்த புற்றுநோய் மையத்திற்கான இடத்தை முடிவு பண்ணுங்க மதுரையில் டாக்டர்கள், நோயாளிகள் அலைக்கழிப்பு
ADDED : டிச 17, 2025 06:43 AM

மதுரை மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் அமைக்க ரூ.38 கோடி ஒதுக்கப்படும் என சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்த நிலையில் இடத்தேர்வு இன்னும் முடிவுசெய்யாமல் இழுபறியாக உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோயாளிகள் மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் 'ரேடியேஷன் தெரபி' சிகிச்சைக்கு மட்டும் பாலரெங்காபுரம் புற்றுநோய் மண்டல மையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அறுவை சிகிச்சை, கீமோதெரபி பெறும் பெரும்பாலான நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சையும் தேவை. இதனால் நோயாளிகள் இருவேறு இடங்களுக்கு அலைகின்றனர்.
பாழடைந்த கட்டடம் மதுரை அரசு மருத்துவமனையில் தற்போதுள்ள பாழடைந்த கட்டடத்தில் 150 படுக்கைகளுடன் கூடிய புற்றுநோய்ப் பிரிவு செயல்படுகிறது. மழை பெய்யும் போது வார்டு சுவர்களின் வழியாக மழைநீர் கசியும். கான்கிரீட் பூச்சுகள் அவ்வப்போது கீழே விழுந்து பயமுறுத்தும்.
இத்தனை அச்சுறுத்தல்களுடன் தான் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இங்கேயே கூடுதல் கட்டடம் கட்ட இடமில்லை. குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டாலும் அந்த இடத்திலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அதிகம் பயன்பாடில்லாத ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டது. இந்த பகுதியே மருத்துவமனை மண்டலமாக உள்ளதால் இடம் பொருத்தமாக இருக்கும் என கூறப்பட்டது.
ஒத்துழைப்பு இல்லை தற்போது அந்த இடத்தை மாவட்ட நிர்வாகம் தர மறுத்து விட்டதால் கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் பகுதி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 தளங்களுக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு முதல்கட்டமாக 5 தளங்கள் கட்ட பொதுப்பணித்துறை வரைபடம் தயாரித்துள்ளது. இந்த இடமும் இன்னும் முடிவாகவில்லை. புற்றுநோய் மையத்திற்கு தேவையான அனைத்து நவீன கருவிகளும் உள்ள நிலையில் கட்டடம் மட்டுமே தேவை. அதற்கு ரூ. 38 கோடி வழங்கப்படும் என மதுரையில் அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம், உள்ளூர் அமைச்சர்களின் ஆதரவு இல்லாததால் இடத்தேர்வு இழுபறியாக உள்ளது. மருத்துவத்துறையில் அதிநவீன சிகிச்சை, வசதிகளைக் கொண்டுள்ள மதுரையை மேலும் மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் அமைக்கவேண்டும். மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், அமைச்சர்களும் முன்வரவேண்டும்.

