/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காங்., என்றாலே குழப்பம் தானா... மாவட்ட தலைவர்கள் 'டென்ஷன்'
/
காங்., என்றாலே குழப்பம் தானா... மாவட்ட தலைவர்கள் 'டென்ஷன்'
காங்., என்றாலே குழப்பம் தானா... மாவட்ட தலைவர்கள் 'டென்ஷன்'
காங்., என்றாலே குழப்பம் தானா... மாவட்ட தலைவர்கள் 'டென்ஷன்'
ADDED : நவ 15, 2025 05:13 AM
மதுரை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என இரவு பகலாக வியூகம் வகுக்கும் வேலைகளில் ஜரூர் காட்டும் நிலையில், காங்.,கில் மாவட்ட தலைவர்களுக்கு மாற்று பொறுப்பாளர்கள் நியமிப்பதில் தீவிரம் காட்டுவது அக்கட்சிக்குள் புகைச்சலை கிளப்பியுள்ளது.
தமிழகம், ஆந்திரா, ஹிமாச்சல்பிரதேசம், ஜம்முகாஷ்மீர் மாநிலங்களில் செயல்படாத மாவட்ட தலைவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பதில் பொறுப்பாளர்களை நியமிக்க பிற மாநிலங்களை சேர்ந்த காங்., நிர்வாகிகள் 32 பேர் கொண்ட குழுவை அகில இந்திய பொதுச் செயலாளர் வேணு கோபால் நியமித்தார்.
தமிழகத்தில் தற்போது இக்குழு மாவட்டம் வாரியாக சென்று மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது.
செயல்படாத தலைவர்கள் கொண்ட பட்டியலை தயார் செய்து அந்த தலைவருக்கு பதில் யாரை பொறுப்பாளராக நியமிக்கலாம் என இரண்டு அல்லது மூன்று நிர்வாகிகளை குறிப்பிட்டு அகில இந்திய தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்யும் நடவடிக்கையை அந்த குழு தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.,) பணிகளை கண்காணிப்பதும் அவசியமான நேரத்தில் மாவட்ட தலைவர்களை மாற்றும் நடவடிக்கையை அகில இந்திய தலைமை முடுக்கிவிட்டுள்ளது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
உட்கட்சி அரசியல் இதுகுறித்து மாவட்ட தலைவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. தற்போதுள்ள மாவட்ட தலைவர்கள் பூத் கமிட்டி அமைப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளை துவக்கியுள்ளனர்.
பீஹாரையடுத்து தமிழகத்தில் பா.ஜ., கவனத்தை திருப்பியுள்ளது. ஆனால் காங்., வழக்கம்போல் சொதப்பலான நடவடிக்கையை எடுத்துவருகிறது. பூத் கமிட்டி அமைத்த பின் மாவட்ட பொறுப்பாளர்களை மாற்றினால் குழப்பம் வராதா.
மாவட்ட செயலாளர் மாற்றம் நடவடிக்கை பின்னணியில் உட்கட்சி அரசியல் உள்ளது.
அதாவது, தற்போதைய 80 சதவீதம் மாவட்ட தலைவர்கள் திருநாவுக்கரசர் தலைவராக இருந்த போது நியமிக்கப்பட்டவர்கள். அதையடுத்து வந்த அழகிரி தனக்கான நிர்வாகிகளை நியமித்தார். தற்போதைய தலைவர் தனது ஆதரவாளர்களை நியமிக்க துடிக்கிறார். மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் 10ல் மாவட்ட தலைவர் பதவி காலியாக உள்ளது. எனவே அங்கு மட்டும் புதிய தலைவர்களை நியமிக்க அகில இந்திய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்றனர்.

