ADDED : நவ 27, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் பஸ் ஸ்டாண்ட், உசிலம்பட்டி ரோடு, வத்ராப் ரோடு, பைபாஸ் ரோடு, அப்பாஸ் நகர், திருமால் நகர், துர்கா நகரில் நடமாடும் நாய்களால் பள்ளி மாணவர்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. பள்ளி மாணவர்களை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணிகளையும் விட்டு வைப்பதில்லை. டூவீலரில் செல்வோரை விரட்டும் போது அவர்கள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.