ADDED : டிச 01, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 1-
ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 3,500 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,100 ரூபாய் முதல், 1,220 ரூபாய்க்கு விற்பனையானது.
உருண்டை வெல்லம், 3,100 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,150 ரூபாய் முதல், 1,280 ரூபாய்; அச்சு வெல்லம், 210 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,250 ரூபாய் முதல், 1,310 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் அதிகமாக வரத்தானது. ஆனால் நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் மூட்டைக்கு, 90 ரூபாய் விலை குறைந்தது. உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை சரிந்தது.

