/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாமதமாக நெல் கொள்முதல் மையம் திறந்து ஏமாத்தாதீங்க: ஒருபோக சாகுபடி விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
தாமதமாக நெல் கொள்முதல் மையம் திறந்து ஏமாத்தாதீங்க: ஒருபோக சாகுபடி விவசாயிகள் எதிர்பார்ப்பு
தாமதமாக நெல் கொள்முதல் மையம் திறந்து ஏமாத்தாதீங்க: ஒருபோக சாகுபடி விவசாயிகள் எதிர்பார்ப்பு
தாமதமாக நெல் கொள்முதல் மையம் திறந்து ஏமாத்தாதீங்க: ஒருபோக சாகுபடி விவசாயிகள் எதிர்பார்ப்பு
UPDATED : ஜன 21, 2026 02:47 PM
ADDED : ஜன 21, 2026 06:11 AM

மதுரை,: மதுரையில் மேலுார், திருமங்கலம் ஒருபோக சாகுபடிக்கான நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் கடந்த சீசனைப் போல தாமதமாக நெல் கொள்முதல் மையங்களை திறந்து ஏமாற்றக்கூடாது என விவசாயிகள் தெரிவித்தனர்.
மதுரை, மதுரையில் மேலுார், திருமங்கலம் ஒருபோக சாகுபடிக்கான நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் கடந்த சீசனைப் போல தாமதமாக நெல் கொள்முதல் மையங்களை திறந்து ஏமாற்றக்கூடாது என விவசாயிகள் தெரிவித்தனர். மேலுாரில் 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலத்தில் 45 ஆயிரம் ஏக்கருக்கான ஒருபோக நெல் சாகுபடி, இருபோக சாகுபடிக்கான முதல்போக சாகுபடி என மதுரையில் நெல் அறுவடை பணிகள் ஜன. 2ம் வாரம் துவங்கியது. மொத்தம் 125 கொள்முதல் மையங்களை திறக்க கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டார். பிப். 20 வரை அறுவடை பணிகள் தொடரும். எனவே தாமதமின்றி நெல் கொள்முதல் மையங்களைத் திறக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
மேலுார் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது:
அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை திறக்காததால் பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இந்த முறை நெல் சாகுபடி செய்துள்ளனர். எனவே மதுரையில் நெல் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
நெல் கொள்முதல் மையங்களை காலம் தாழ்த்தி திறப்பதால் விவசாயிகளுக்கு பயனில்லை. மையத்தில் எடையிடப்பட்ட விவசாயிகளின் நெல் குவியலை தாமதமின்றி லாரிகளில் ஏற்றி கோடவுனுக்கு அனுப்ப வேண்டும். நெல் குவியலை உடனுக்குடன் எடுக்காவிட்டால் மற்ற விவசாயிகளின் நெல்லை எடையிட முடியாது.
ஜனவரியில் மழைவர வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. எந்த மையத்திலும் நெல் மூடைகளை பாதுகாப்பதற்கு கூரை வசதியில்லை. திறந்தவெளியில் கொட்டி தார்ப்பாய் கொண்டு மூடியிருக்கும் நெல்குவியலும், நெல்மூடைகளும் மழைத்தண்ணீர் பட்டால் ஈரத்தில் நெல் முளைத்து விடும்.
கடந்த சீசனில் விவசாயிகள் இதுபோன்ற பாதிப்பை சந்தித்தோம். நான்குமாத காலம் போராடி வளர்த்த நெல்லை, கடைசியில் பயன்படுத்த முடியாமல் வீணாகி விட்டது. அதுபோல மூடைக்கு ரூ.40 முதல் ரூ.80 வரை கமிஷன் வாங்குவதை தடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சரவணன் கூறியதாவது: தற்போது திருக்கானை, குன்னத்துார் உட்பட 8 நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம் 125 மையங்கள் என்றாலும் அத்தனை மையங்களையும் ஒரே நாளில் திறப்பதில்லை. உரிய நேரத்தில் மையங்களை திறக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

