/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எங்களை துாண்டி விடாதீங்க...: நெல் கொள்முதல் செய்யாமல் காத்திருக்கும் விவசாயிகள்
/
எங்களை துாண்டி விடாதீங்க...: நெல் கொள்முதல் செய்யாமல் காத்திருக்கும் விவசாயிகள்
எங்களை துாண்டி விடாதீங்க...: நெல் கொள்முதல் செய்யாமல் காத்திருக்கும் விவசாயிகள்
எங்களை துாண்டி விடாதீங்க...: நெல் கொள்முதல் செய்யாமல் காத்திருக்கும் விவசாயிகள்
ADDED : மார் 06, 2026 05:21 AM

மதுரை: வருவாய்த்துறையினர் போராட்டம் நடத்துவதால் வி.ஏ.ஓ.,க்கள் நெற் பயிருக்கான அடங்கல் சான்றிதழ் வழங்கவில்லை. நெல் கொள்முதல் மையத்தில் நெல்லை எடை யிடவில்லை என விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயி தான் பயிர் சாகுபடி செய்துள்ளாரா என்பதற்கான அடங்கல் நெல்கொள்முதல் மையத்தில் கேட்கப்படும். வி.ஏ.ஓ., மூலம் அடங்கல் சான்றிதழ் கையால் எழுதித் தருவர். அதைக் கொண்டு சென்றபின் வி.ஏ.ஓ.,விடம் மீண்டும் சரிபார்த்து ஓ.டி.பி., எண் பெற்ற பின்பே நெல் எடையிடப்படும். வி.ஏ.ஓ.,க்கள் தொடர் போராட்டத்தால் ஒவ்வொரு மையத்திலும் 3000 மூடைகளுக்கு மேல் தேங்கி கிடக்கிறன. களம் முழுவதும் நெல் மூடையால் நிரம்பி கிடக்கிறது. நெல்லை எடையிட்டு பணத்தைப் பெற முடியாமல் தினமும் காத்திருக்கிறோம். மாநிலம் முழுவதும் இப்பிரச்னை உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மேற்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வி.ஏ.ஓ.,விடம் அடங்கல் சான்று பெற முடியவில்லை. அடங்கல் இல்லாததால் நெல் கொள்முதல் மையத்தில் நெல்லை வாங்க மறுக்கின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் முடிந்து நிலைமை சீரான பின் அடங்கல் வாங்கி நெல்லை விற்பது என்பது நடக்காத விஷயம். மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் ஒருங்கிணைந்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஏற்கனவே சாகுபடி செய்யும் போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா, சிட்டா நகலை வாங்கிக் கொண்டு நெல்லை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினோம். கலெக்டர், டி.ஆர்.ஓ.,விடம் மனு கொடுத்துள்ளோம். நெல் கொள்முதல் மையம் செயல்படாவிட்டால் விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

