/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கர்ப்ப பை வாய் புற்றுநோய் பயம் வேண்டாம் இன்று (பிப்.4) உலக புற்றுநோய் தினம்
/
கர்ப்ப பை வாய் புற்றுநோய் பயம் வேண்டாம் இன்று (பிப்.4) உலக புற்றுநோய் தினம்
கர்ப்ப பை வாய் புற்றுநோய் பயம் வேண்டாம் இன்று (பிப்.4) உலக புற்றுநோய் தினம்
கர்ப்ப பை வாய் புற்றுநோய் பயம் வேண்டாம் இன்று (பிப்.4) உலக புற்றுநோய் தினம்
ADDED : பிப் 04, 2024 05:36 AM

இது என்ன கணக்கு?
இது கர்ப்ப பை வாய் புற்று நோயை ஒழிக்க உலக சுகாதார மையம் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுத்துள்ள இலக்கு. அதாவது 2030க்குள் 90% வளர் இளம் பெண்களுக்கு கர்ப்ப பை வாய் புற்று நோய் தடுப்பூசி (HPV vaccine) செலுத்தி விட வேண்டும்.
70% பெண்கள் (30-- -65 வயது) கர்ப்ப பை வாய் புற்று நோய்க்கான முன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 90% கர்ப்ப பை வாய் புற்று நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து வைத்தியம் செய்து குணப்படுத்த வேண்டும்.
இப்படி செய்தால் கர்ப்ப பை வாய் புற்று நோயை முற்றிலுமாக ஒழித்து விடலாம். ஹியூமன் பாப்பிலோமா என்ற வைரஸ் தான் கர்ப்ப பை வாய் புற்று நோய்க்கான காரணம் என்று தெரிந்தவுடன் அதற்கான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி உள்ள ஒரே புற்று நோய், கர்ப்ப பை வாய் புற்று நோய்மட்டும்தான். எனவேதான் அது மிகவும் வலியுறுத்தப்படுகிறது.
9லிருந்து 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6 மாத இடைவெளியில் 2 தடவையும் , 15க்கு மேல் 26 வயது வரை 3 தடவையும் இந்த தடுப்பூசி போட வேண்டும்.
இந்த இளம் வயதிலேயே தடுப்பூசி போட்டால் அதன் எதிர்ப்பு சக்தியும் வலிமையும் கிட்டத்தட்ட 100% இருக்கும்.
அடுத்து புற்று நோய் முன் பரிசோதனை. இது ஏதேனும் தொந்தரவு வந்த பிறகு போய் பரிசோதனை செய்து கொள்வது அல்ல. எந்த வித தொந்தரவும் இல்லாத போதே பரிசோதனை செய்து புற்று நோய்க்கான அறிகுறி உள்ளதா என்று தெரிந்து கொள்வதுதான். பாப் ஸ்மியர், HPV டெஸ்ட், VIA VILI என்று மூன்று பரிசோதனை முறைகள் உண்டு.
30 வயதிலிருந்து 65 வயது வரை 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டும். நாம் 70% இலக்கை எதிர் நோக்கும் பொழுதில் 10% க்கும் குறைவாகத்தான் பெண்கள் இந்த பரிசோதனைகள் செய்து கொள்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயம்.
குறைந்த பட்சம் இரண்டு முறையாவது 35 முதல் 45 வயதில் இந்த பரிசோதனை மேற்கொள்வது மிக அவசியம்.
அடுத்த 90%- புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடித்து குணப்படுத்த வேண்டும். Colposcope சோதனை மற்றும் பயாப்சி மூலம் கண்டு பிடித்து தக்க நேரத்தில் முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.
எல்லா நாடுகளும் இவற்றை சரியாக மேற்கொண்டால் கர்ப்ப பை வாய் புற்று நோயை முற்றிலுமாக ஒழித்து விடலாம் என்றால் அதை கடைப்பிடிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை அல்லவா?
பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கர்ப்ப பை வாய் புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக ஜனவரி கடைப்பிடிக்கப்பட்டது. இன்று உலக புற்றுநோய் தினம் ஆகும்.
--டாக்டர் ரேவதி ஜானகிராம்
மகப்பேறு, பெண்கள் நல மருத்துவர்
மதுரை. 94430 40355