/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'நீட்' தேர்வில் தி.மு.க., தான் துரோகம் செய்தது டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
/
'நீட்' தேர்வில் தி.மு.க., தான் துரோகம் செய்தது டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
'நீட்' தேர்வில் தி.மு.க., தான் துரோகம் செய்தது டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
'நீட்' தேர்வில் தி.மு.க., தான் துரோகம் செய்தது டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 23, 2025 04:25 AM
மதுரை :  ''காங் - தி.மு.க., கூட்டணி அரசு 2010ல் அறிமுகப்படுத்திய நீட் தேர்வை அன்று துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: 2021 சட்டசபை தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த  ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று ஸ்டாலினும், அவரது மகனும் பொய் பிரசாரம் செய்தார்கள். அடுத்ததாக நீட்டுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து வாங்கி குப்பையில் போட்டனர். லோக்சபா தேர்தலில் போகாத ஊருக்கு வழி சொல்வது போல் மீண்டும் போலி வாக்குறுதிகளை கொடுத்தனர்.
தற்போது தி.மு.க., ஆட்சியில் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் 22 அப்பாவி மாணவர்கள் பலியாகி உள்ளார்கள். இதற்கு தி.மு.க.,வின் பொய்யான தேர்தல் வாக்குறுதிதான் காரணம். 2009ல் காங்கிரஸ் அரசிடம் தி.மு.க., கூட்டணி வைத்து மத்திய அமைச்சர் பதவிகளையும் பெற்றது. அப்போது தி.மு.க., எம்.பி.,க்கள் 27 பேர் இருந்தனர். தி.மு.க.,வை மீறி எந்த திட்டமும் காங்கிரஸ் கொண்டு வர முடியாத நிலையில் இருந்தது. 21.12.2010ல் நீட் தேர்வு குறித்து மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டது. பார்லிமென்ட்டில் தி.மு.க., எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அக்கால கட்டத்தில் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. நீட் தேர்வு குறித்து ஏதாவது அறிக்கை வெளியிட்டாரா. மனசாட்சி இருந்தால் ஸ்டாலின் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். இதன் மூலம் தி.மு.க.,தான்  துரோகம் செய்தது என்று தெளிவாக தெரிந்து விடும். இவ்வாறு கூறினார்.

