/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்கரப் டைபஸ் தொற்றுநோய் பரவல் அரசுக்கு டாக்டர் சரவணன் எச்சரிக்கை
/
ஸ்கரப் டைபஸ் தொற்றுநோய் பரவல் அரசுக்கு டாக்டர் சரவணன் எச்சரிக்கை
ஸ்கரப் டைபஸ் தொற்றுநோய் பரவல் அரசுக்கு டாக்டர் சரவணன் எச்சரிக்கை
ஸ்கரப் டைபஸ் தொற்றுநோய் பரவல் அரசுக்கு டாக்டர் சரவணன் எச்சரிக்கை
ADDED : ஜன 05, 2025 05:07 AM
மதுரை : ''கிராமப்புற பகுதிகள், மலை கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். இல்லையென்றால் அதிகளவில் ஸ்கரப்டைபஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறிவிடும்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் எச்சரித்தார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: ஸ்கரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்றாகும். 2021ல் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இந்நோய் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டபோது தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் துரித நடவடிக்கை எடுக்காததால் கடந்த ஆண்டு மட்டும் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். 8 பேர் இறந்தனர்.
நோய் வரும் முன் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இனியாவது ஸ்டாலின், உதயநிதி புகழை பரப்பும் வேலையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு சுகாதாரத்துறையை கவனிக்க வேண்டும். விவசாயிகள் அதிகமாக இருக்கும் கிராமப்புற பகுதிகள், மலை கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். இல்லையென்றால் அதிகளவில் ஸ்கரப்டைபஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறிவிடும் என்று கூறினார்.

