/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரைவுக் கூட்டு மதிப்பு பதிவுத்துறை அறிவிப்பு
/
வரைவுக் கூட்டு மதிப்பு பதிவுத்துறை அறிவிப்பு
ADDED : ஆக 02, 2025 01:36 AM
மதுரை: மதுரை தெற்கு மற்றும் வடக்கு பதிவு மாவட்டங் களில் உள்ள சார்பதிவு அலுவலகங்களின் எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, துணைப் பதிவுத்துறை தலைவரால் கூட்டு மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இது ஆக.1ல் நடந்த மதுரை மாவட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி துணைக்குழுக் கூட் டத்தில் வரைவு அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், பதிவுத்துறை இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.
மாவட்ட பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், சார்பதி வாளர் அலுவலகம் ஆகிய வற்றில் இந்த வரைவுக் கூட்டு மதிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை 15 நாட்களுக்குள் தெரிவிக்க லாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.