/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திராவிடக் கட்சிகளால் கூட்டணியின்றி ஆட்சி அமைக்க முடியாது; மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் கருத்து

ADDED : நவ 25, 2024 06:34 AM
மதுரை: 'கூட்டணி தயவின்றி எந்தத் தேர்தலிலும் தி.மு.க., - அ.தி.மு.க., வால் வெற்றி பெற சாத்தியமே இல்லை' என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
மணிப்பூர் மாநிலம் கலவரத்தால் ஓராண்டாக பற்றி எரிகிறது. பிரதமர் மோடி உக்ரைன், ரஷ்யா, இஸ்ரேல் நாடுகளுக்குச் சென்று சமாதானத்தை கட்டமைப்பதாக கூறுகிறார். சொந்த நாட்டில் ராணுவத்தை அனுப்பியும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
தி.மு.க., ஆட்சி எஞ்சியுள்ள காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும். ஆட்சியில் இரண்டு அமைச்சர் பதவி பெறுவதன்மூலம் அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. தேர்தலுக்கு முன் கொள்கை திட்டம் உருவாக்கி, கூட்டணி அமைத்து வென்றபின் அதை செயல்படுத்தும் கூட்டணியே முழுமையான கூட்டணி.
தற்போதைய சூழலில் தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது. எந்தத் தேர்தலிலும் திராவிட கட்சிகளாலும் கூட்டணி இன்றி ஆட்சி அமைப்பது சாத்தியம் இல்லாதது.
புதிய கட்சிகளுடன் யார் கூட்டணி சேர்வர், அக்கூட்டணி வெல்லுமா, வென்றபின் ஆட்சியில் பங்கு கொடுப்பரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். மதுரை மேலுார் அருகே அரிட்டாபட்டியில் கனிமங்களை கொள்ளை அடிப்பதற்கான டெண்டரை வெளியிட்ட மத்திய அரசை கண்டிக்கிறோம்.
இவ்வாறு கூறினார்.