ADDED : செப் 23, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக அமைதி தினம், மகாத்மா காந்தி ஆடைப் புரட்சி தின சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
யோகா மாணவி பழனியம்மாள் வரவேற்றார். மியூசிய செயலாளர் நந்தாராவ், '1921 செப்.22ல் மதுரையில் காந்தியடிகள் மேற்கொண்ட ஆடைப் புரட்சி' குறித்து பேசினார். நிறுவன முதல்வர் தேவதாஸ், 'தனிமனித அமைதியே உலக அமைதிக்கு வித்திடும்' எனும் தலைப்பில் பேசினார்.
டி.வி.எஸ்., மேல்நிலைப் பள்ளி ஓய்வு உதவித் தலைமை ஆசிரியர் ராமசாமி, 'அமைதிப் பண்பாடு' எனும் தலைப்பில் பேசினார். காந்தியடிகளின் எளிமை, அமைதி குறித்து மாணவர்கள் கலந்துரையாடினர். யோகா மாணவர் கார்த்திக் நன்றி கூறினார்.