ADDED : ஆக 30, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: திருவேடகத்தில் ராட்சத குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய் அமைந்துள்ளது. இதில் சில நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கொப்பளித்து வெளியேறுகிறது.
இதனால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி மதுரை மெயின் ரோட்டில் செல்கிறது. மேலும் கடன் சங்கத்தின் வளாகம் முழுதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியே சேறும் சகதியுமாக மாறிவிட்டது. வறட்சியால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகையில் இதுபோல் குடிநீர் வீணாவது வேதனை அளிக்கிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
