/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை விமானநிலையத்தில் கார்களுக்கு கூடுதல் கட்டணம்: டிரைவர்கள் புகார்
/
மதுரை விமானநிலையத்தில் கார்களுக்கு கூடுதல் கட்டணம்: டிரைவர்கள் புகார்
மதுரை விமானநிலையத்தில் கார்களுக்கு கூடுதல் கட்டணம்: டிரைவர்கள் புகார்
மதுரை விமானநிலையத்தில் கார்களுக்கு கூடுதல் கட்டணம்: டிரைவர்கள் புகார்
ADDED : ஜன 30, 2024 07:27 AM
மதுரை : மதுரை விமான நிலையத்தில் கார்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக டிரைவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.மதுரை விமான நிலையத்தில் சென்னை, பெங்களுரூ, டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடக்கிறது.
பயணிகளை இறக்கி விடுவதற்கும், ஏற்றிச் செல்வதற்கும் அதிக எண்ணிக்கையில் கார்கள் தினந்தோறும் விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றன.
நுழைவு வாயில் பகுதியில் கார்கள் வரும்போது, எத்தனை மணிக்கு வருகிறது என்பதை பதிவு செய்து உள்ளே செல்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. பின்னர் வெளியேறும் வழியில், அந்த அனுமதி சீட்டை பணியாளர்கள் வாங்கி கொண்டு எவ்வளவு நேரம் கார் நின்றதோ அதற்கான கட்டணத்தை வசூல் செய்கின்றனர்.
ஆனால், சில சமயங்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக டிரைவர்கள் புகார் அளித்துள்ளனர். நேற்று முன்தினம்(ஜன. 27) கார் டிரைவர் ஒருவரிடம், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஒரு வீடியோ வெளியானது.
இதுகுறித்து டிரைவர்கள் சிலர் கூறுகையில், ''விமான நிலையத்திற்குள் பயணிகளை இறக்கியபின், 10 நிமிடத்திற்குள் வெளியேறி விட்டால் கட்டணம் கிடையாது. அதற்கு மேல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றால், 2 மடங்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில சமயங்களில் பயணிகளை ஏற்றிய பின்னரும், இறக்கிய பின்னரும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்போதும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
சில வடமாநில பணியாளர்கள்தான் இப்படி வேண்டுமென்றே கூடுதலாக வசூலிக்கின்றனர். பயணிகளை ஏற்றுவதற்கு வரிசையாக கார்களை நிறுத்தும் போது கார் சக்கரங்களை திடீரென லாக் செய்து விடுகின்றனர்.
அதற்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கின்றனர். விமான நிலைய அதிகாரிகள் கண்காணித்து, கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.