ADDED : ஏப் 03, 2026 06:37 AM
வாடிப்பட்டி: ஆண்டிபட்டி பங்களா நான்கு வழிச்சாலையில் எதிர்த் திசையில் செல்லும் குவாரி லாரி உள்ளிட்ட வாகனங்களால் விபத்து அபாயம் தொடர்கிறது.
இங்குள்ள கச்சைகட்டி, பாலமேடு ரோட்டில் 10க்கும் மேற்பட்ட கிரஷர், குவாரிகள் உள்ளன.
தினமும் ஏராளமான லாரிகள் கற்கள், ஜல்லிக்கற்கள், எம் சாண்ட் ஏற்றிச் சென்று வருகின்றன. மதுரை, சோழவந்தான் பகுதியில் இருந்து வரும்போது வாடிப்பட்டி ரோட்டில் 250 மீட்டர் துாரம் சென்று திரும்பி வர வேண்டும்.
இதை தவிர்க்க சோழவந்தான் சந்திப்பில் இருந்து போக்குவரத்து விதிமீறி, எதிர் திசையில் பாலமேடு ரோட்டுக்குச் செல்கின்றன.
லாரிகள், கார், டூவீலர்கள் தவறான திசையில் செல்வதால், மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக இறங்கும் வாகனங்கள், திடீரென எதிர் வரும் வாகனங்களால் தடுமாறுகின்றன. விபத்தில் சிக்கும் அபாயம் அதிகம் உள்ளது.
சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கிறது.
தவறான திசையில் செல்லும் வாகனங்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
