நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரைக்கு இன்றும் நாளையும் (ஜன.30, 31) முதல்வர் ஸ்டாலின் வந்து செல்வதால் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
விமானம் மூலம் இன்று மதுரை வரும் முதல்வர், சிவகங்கை சென்று மீண்டும் நாளை மதுரை வந்து சென்னை செல்கிறார். மதுரை விமான நிலையம், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் பயணிக்கும் வழிகள், தங்குமிடமான ஜி.ஆர்.டி., ஓட்டல், மதுரை மாவட்ட எல்லைக்குள் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றும் நாளையும் (ஜன. 30, 31) ட்ரோன், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்றார்.

