ADDED : நவ 14, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நாகனாகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போலீஸ், சுதந்திர சிறகுகள் அறக்கட்டளை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமை வகித்தார். போதை பழக்கத்தால் ஏற்படும் உடல் நலக்கேடு, சமுதாய சீர்கேடுகள் குறித்து அறக்கட்டளை நிர்வாகி மூகாம்பிகை, எஸ்.ஐ., சுபா பேசினர். ஆசிரியர் சாலமன் வரவேற்றார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்தனர். போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து மாணவர்களின் கேள்விகளுக்கு போலீசார் பதில் அளித்தனர்.

