ADDED : செப் 03, 2026 06:33 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மருது, என்.எஸ்.எஸ்., திட்ட தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன் போதைப் பொருள் பாதிப்பு குறித்து விளக்கினர்.
புதுார் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் அனிதா, விஸ்வநாதன், பழனிவேல், ஏட்டுக்கள் உமாதேவி, தங்கராஜன், பாலகிருஷ்ணன், ஜெயராம், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். திட்ட அலுவலர் செய்யது முகமது யூசுப், நுாருல்லா, உதவித் தலைமையாசிரியர்கள் முகமது ரபி, அல்ஹாஜ் முகமது ஏற்பாடு செய்தனர்.
