தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போதை மாத்திரை: இருவர் கைது

போதை மாத்திரை: இருவர் கைது

போதை மாத்திரை: இருவர் கைது


ADDED : ஆக 24, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை, ஆக. 25-

மதுரை நகரில் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். நேற்று தல்லாகுளம் பகுதியில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.ஐ.,அழகுபாண்டி தலைமையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றும் தட்சிணாமூர்த்தி 26, கீழப்பனங்காடியைச் சேர்ந்த முத்துவேல் 26, ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் போதை மாத்திரைகளான டாபன்டேடால் 100 மி.கி., என்ற 100 மாத்திரைகளைக் கொண்ட 10 அட்டைகளை வைத்திருந்தது தெரிந்தது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us