/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நகராட்சி வாகனங்களுக்கு நடுரோட்டில் 'பார்க்கிங்' வாகன நிறுத்தத்தில் கட்டடம் வருவதால்

ADDED : ஏப் 15, 2025 06:44 AM
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் புதிதாக காம்ப்ளக்ஸ் கட்டப்படுவதால், வாகனங்கள் நடுரோட்டில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நகராட்சியின் பழைய அலுவலகம் மதுரை ரோட்டில் இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் பழைய அலுவலகத்தின் பின்புறம் முன்சீப் கோர்ட் ரோட்டில் புதிதாக அலுவலகம் கட்டப்பட்டது. நகராட்சியில் குடிநீர் லாரிகள், குப்பை லாரிகள், பேட்டரி வாகனங்கள் என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. இவை அனைத்தும் நகராட்சியின் பழைய அலுவலக காம்ப்ளக்சில் நிறுத்தப்பட்டன.
சமீபத்தில் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் 20 க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் நகராட்சி வாகனங்களை முன்சீப் கோர்ட் ரோட்டில் நிறுத்துகின்றனர். இந்த ரோட்டில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலாக இருக்கிறது.
இதே ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் வந்து செல்ல இடையூறாக உள்ளது. எனவே நகராட்சி வாகனங்கள் நிறுத்துவதற்கு உரிய 'பார்க்கிங்' வசதியை செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.